tamilnadu

img

உயிருடன் எரிக்கப்பட்ட தலித் இளைஞர்: அதிர்ச்சியில் தாய் மரணம்

உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த இளைஞரின் தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
உத்தபிரதேச மாநிலத்தில் ஹார்டோய் மாவட்டத்தின் பாதேசா பகுதியில் அபிஷேக் என்ற மோனு (20) தலித் இளைஞர். இவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மோனுவை சிலர் ஒரு வீட்டில் அடைத்து அடித்துத் துன்புறுத்தி உயிருடன் வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோனுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மோனுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மோனு லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் பழகி வந்த பெண்ணை பார்க்க மோனு சென்றபோது தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இச்சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.